Wednesday, September 1, 2010

உன்னை தொலைக்க ஆரம்பித்த தருணங்களிருந்து


அன்று உறவுகள் அற்ற எனக்கு
உன் அன்பால் ஒரு உலகம் அமைத்து
உன்னை உறவாக்கி கொடுத்தாய்,
உன்னை உயிராய் நினைத்த என்னை
உதறிச் சென்றாய் இன்று

உன் விருப்புக்கிணங்க
என் கனவுகளை தொலைத்து, ஆசைகளை புதைத்து,
உன்னுடன் மட்டுமே சென்ற
தொலை தூர பயணங்களும்,
கடற்கரைகளில் உன்னுடன் கைகோர்த்து
நடந்து வந்த பாதைகளையும்
திரும்பி பார்க்க மறுக்கின்றதென் மனம்

மனதால் ஊனம் உற்ற என்னை
உன் பிரிவால் ஊமை ஆக்கினாய்
வாழ்க்கை என்னும் இன்ப கடலில்
வழி காட்டியாய் வந்து
வானவில்லாய் மின்னிச் சென்றாய்

உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய எனக்கு
நிரந்தர தூக்கத்தை கொடுத்து விட்டாய்....
இன்று உன் பிரிவை தாங்க முடியாமல்
என் நினைவுகளில் இருந்து
உன் எல்லையற்ற அன்பை விலக்க
முயச்சிக்கிறேன்.....