Monday, June 21, 2010

என் வாழ்க்கையை வழி மறித்த நீ......


உலகம் உருண்டை என்பது
எல்லோரும் அறிந்த உண்மை
இந்த உலகில் நீ மட்டும் அழகி என்பது
நான் மட்டும் அறிந்த உண்மை

உனக்காக பல வேதனைகளை சுமந்து
உன் சந்தோசத்துக்காக என்
பல கவலைகளை மறைத்தேன்
என் வலி கொண்ட இதயத்தில்
இனிமையான சுவாசக் காற்று நீ

என் உயிர் நீ தான் என்று
நீ அறியாமல் பிரிந்து சென்றாய்
உன்னோடு வாழ்ந்த காலம், கடந்த காலம்
ஆனாலும் உந்தன் நினைவுகளால்
வாடித் தவிக்கிறேன்

அன்று வானில் பல நட்சத்திரம் தோன்றி மறைந்தாலும்
என் வாழ்வில் ஒரே ஒரு சூரியனாக
நீ மட்டும் பிரகாசித்தாய்

என் நிம்மதியான வாழ்வை மறித்து
வழியை திசை மாற்றினாய்
நீ விலகிய நாள் தொடக்கம் இன்றுவரை
வாழ்வை வெறுத்து, நிம்மதியை தொலைத்து
அலைந்து கொண்டிருக்கிறேன்......

Wednesday, June 16, 2010

என் இதயத்தில் உனக்காக......


உன் நினைவுகளில் கனவு கண்ட
என் விழிகளுக்கு
இன்னும் இரவுகளில் தூங்கவில்லை
தினமும் உன்னை மட்டும் நினைக்கும்
இந்த இதயத்திற்கு
இடைவெளி ஏதும் இல்ல

உன்னை புரிந்து கொண்ட எனக்கு
உன் பிரிவை தாங்க முடியவில்லை
காத்திருந்து பழகியவள் நீ
என்றும் நான் உன்னக்காக காத்திருப்பேன்

உன் நினைவுகளை சுமக்கின்ற என் இதயம்
உனக்கு சொல்ல நினைத்த வார்த்தைகள்
உன்னை கண்டவுடன்
உதடுகள் மௌனமாகியது
நாடித் துடிப்பு உள்ளவரை
தொடரும் உன் நினைவுகள்

உன்னை காண துடிக்கும் கண்ணும்
உன்னுடன் பேச எண்ணும் உதடுக்கும்
தினம் தினம் ஏமாற்றங்கள்
உன்னை நினைத்து நான் படும் வேதனைகள்
வார்த்தைகளில் அடங்காதவை
வலிகள் சொல்லிப்புரியாதவை

என்னை புரிந்து கொண்டு நீ
உன் காதலை என்னிடம் சொல்வாய்
என்ற நம்பிக்கையில்
உன் நினைவுகளை சுவாசித்து
உனக்காக உயிர் வாழ்கிறேன்!!!