Wednesday, August 7, 2019

காதல் உணர்வு



திரையில் மட்டும் ரசித்த காதல்
தினமும் உணர்கிறேன் உன்னால் இப்போ
யாவும் நிஜமா என்று
என்னையே கேட்கும் என் மனசு..

வெற்று பக்கங்களாக
ஊசலாடிய என் வாழ்க்கை
புத்தகத்திற்கு வண்ண
முகவுரை எழுதத் தொடங்கியவளே.. 

தனிமையில் தத்தளித்த எனக்கு
உரசிய உன் இதழ்களில்
பற்றியது என்னுள்
காதல் தீ..

உன்னுடனான உரையாடலை
மட்டுமே விரும்பும் எனக்கு
உன் மௌனம் கூட
இனிமையான ரணம் தான்..    

Friday, August 2, 2019

நவீன காதல்

 இணையத்தின் ஊடக வைரஸ் பரவும் என்பது
 நான் கற்ற தொழில்நுட்ப அறிவியல்
 உன்னுடனான உரையாடலின் பின்தான்
 உணர்கிறேன் இதயத்திற்கு
 காதல் ஊடுருவும் என்ற உளவியல்

 கடல் சூழ்ந்த சிறு நிலத்தில்
 தொழில் நிலை கைதியாய் நான்
 முதுகலை முடிக்கும்
 பட்டத்து இளவரசி நீ 

நம் தூரத்தின் இடைவெளியை குறைக்க
காணொளியில் நித்தமும் கதைபேசல் 
என் தவிர்ப்புகளுக்கு கானல்
இரைபோடும் உன் குரல் செய்திகள்

எல்லைகள் மீறும் நாகரீகத்திலும்
கண்ணியம் தவறாத நம் உறவு
என் இறுதி துடிப்பு வரை உடையாமல் இருக்க
வேண்டுகிறேன் இறைவனை
அருள் கொடுப்பாயா என் தேவதையே....