திரையில்
மட்டும் ரசித்த காதல்
தினமும்
உணர்கிறேன் உன்னால் இப்போ
யாவும்
நிஜமா என்று
என்னையே
கேட்கும் என் மனசு..
வெற்று
பக்கங்களாக
ஊசலாடிய
என் வாழ்க்கை
புத்தகத்திற்கு
வண்ண
முகவுரை
எழுதத் தொடங்கியவளே..
தனிமையில் தத்தளித்த
எனக்கு
உரசிய உன் இதழ்களில்
பற்றியது என்னுள்
காதல் தீ..
உன்னுடனான உரையாடலை
மட்டுமே விரும்பும்
எனக்கு
உன் மௌனம் கூட
இனிமையான ரணம்
தான்..
No comments:
Post a Comment