பல வருட கனவு
சில
தடைவை நொறுங்கியது
இருந்தும்
மீண்டும் கனவை
நோக்கிய
பயணம்
ஒவ்வொரு
வினாடியும்
மிகுந்த
கவனிப்புடன் மிக
நீண்ட
பயணம் அந்த ஒரு
நாள்
எதிர் பார்த்து
குடியேறிய
நாட்டில் இருந்து
தாய்நாட்டுக்கு
வந்து மருத்துவ சிகிச்சை
மீண்டும்
குடியேறிய நாட்டுக்கு பயணம்
கனவை
நோக்கி
அனைத்து
நவீன வசதி
இருந்தும்
கடவுள் பிரார்த்தனை
கரம்
பிடித்தவன் காரில் பின் தொடர
அதிவேக
நெடுஞ்சாலையில்
ஆம்புலன்ஸ்
இல் பயணம்
உன்னை
ஈன்றவள்
உனக்கு
ஆறுதல் சொல்ல
எதோ
தப்பாயிற்று
கனவு
கானல் நீர் ஆகிடுமோ
எனும்
பதற்றம்
வைத்தியசாலையை
நோக்கி
ஒரு
அறையில் சில நிபுணர்
ஒரே
நிற ஆடையில் சில நிமிட
கலந்துரையாடல்
உன்னை
அழைத்து வந்தவர்கள்
அறையின்
வெளியில்
சில நிமிடம் கடந்து
சுற்றி
வர உள்ளோர் மகிழ்ச்சி
கடலில்
ஈன்றெடுத்த
நீயோ வேதனை உச்சத்தில்
உன்
மயக்கம் தெளிய பல மணிநேரம்
என்று
சொன்ன மருத்துவ விஞ்ஞானம்
கூட
தோற்று போனது
மழலையின்
அழுகுரல் கேட்ட
மறுகணம்
நீ கண் விழித்துப் பார்ததில்
விருந்தினர்
அனைவரும் குழந்தையை
அரவணைக்க
பெற்றெடுத்தித்த
நீ தன்னந்தனியாய்
கட்டில்
படுக்கையில்
இவ்வளவு
வேதனையிலும்
ஒரு
ஆனந்த சிரிப்பு
எதிர்பார்த்து
நடந்திடுச்சு
கனவு நனவாகியது என்பதில். . . .
No comments:
Post a Comment