Thursday, May 20, 2010

தந்தை, தாய்......


பத்து மாதங்களாக பாசத்துடன் சுமந்தாய்
உன் குருதியை பாலாக ஊட்டினாய்
உண்ணுவதற்கு உணவு கொடுத்த நீ
நிம்மதி உறக்கமும் தந்தாய்

பல அறிவுரை கற்று கொடுத்து
சமூகத்தில் நல்ல மனிதன் ஆக்கினாய்
பல வெற்றிகளை பாராட்டிய நீ
தோல்விகளுக்கு தோள் கொடுத்தாய்

தப்பு பண்ணியத்துக்கு தண்டித்தாய்
தலை சாய்க்க தலையணை தந்தாய்
என் ஆற்றல்கள் வளர்க்க உதவி,
சமூகம் என்னை போற்றுவதை கண்டு மகிழ்ந்தாய்

நான் கேட்பதை கொடுக்கும் கடவுள் நீ
நீ காட்டிய பாதைகள் பல கடந்து
சிகரங்கள் தொட்டேன்
உங்களது நல்லாசியுடன்
வாழ்க்கை பயணதில் வழி தவறாமல்
இனிதே பயணித்து கொண்டிருக்கிறேன்.....

நீ, நான், .....


நீ சுவாசிக்கும் பொழுதுகளில்
நான் உயிர் வாழ்கிறேன்
நீ போகும் இடமெங்கும்
நான் காத்திருந்து பேசினேன்

உன்னை சந்திக்கின்ற அதிசயமான
பொழுதுகளில் எல்லாம் உந்தன் இதழ் பேசியது
உனக்காக உனக்கு பிடித்த பலவற்றை
தயங்காமல் செய்தேன்
பிரிந்து செல் என்று சொல்ல மனதின்றி
வலிகள் பிடிக்கும் என்றாய்

வசந்தங்கள் நிறைந்த வாழ்வில் இருக்கும் போது
என் அருகில் இருந்தாய்
பல சந்தோசங்களை என்னுடன் கழித்து
பிரிவு என்னும் வலியை விட்டு சென்றாய்

உன் எதிர்காலத்தை கனவு கண்டு
என் நிகழ்காலத்தை வீணடித்தாய்
இரவுகளில் உறக்கம் இன்றி தவிக்கிறேன்
உன்னுடன் பேச துடிக்கிறேன்
விடை பெற்றது நீ என்றாலும்
வலி பெறுவது நான் தானே!!!

Friday, May 14, 2010

என்றும் மறவாத பள்ளி நாட்கள்


பதின்மூன்று ஆண்டுகளாக பள்ளியிலே
மாணவன் என்ற சமூகத்தில்
பல வருட படிப்புகளுக்கு
சில மணிநேர சோதனைகள்

நாட்கள் செல்லச் செல்ல
அறிவுகள் வளர்கின்றன
பல நாடகங்கள் அரங்கேற்றி
காதல் தோல்விகளை சந்தித்தோம்

மாணவ தலைவன் என்ற தரத்துக்கு உயர்த்தப்பட்டு
பல மன்றங்கள் ஆரம்பித்தோம்
விஞ்ஞான மன்றம் நிறுவி
நவீன உலகில் நன்மைகள் பெற்றோம்
கலை மன்றம் தொடங்கி
கலைஞர்களை அடையளாம் கண்டோம்

பட்டங்கள் பெறுவதற்கு
சில குறும்புகள் செய்து சிகரம் தொட்டோம்
பாடங்கள் குதிரை விட்டு
உதைபந்தாட்டம் விளையாடி
உப அதிபரிடம் உதை வாங்கியது
இன்றும் சுகமாக வலிக்கிறது

அன்று பல மாணவர்களுடன் பழகி
சில நண்பர்களாக சேர்ந்தோம்
இன்று பிரிந்து வெகு தூரம் சென்றாலும்
சிநேகிதர்களாக இருக்கிறோம்

பல ஆசிரியர்களால் தண்டிக்கப்பட்டு
சில ஆசிரியர்களிடம் பாராட்டு பெற்றோம்
அன்றைய மகிழ்ச்சிகள் இனி எங்களுக்கு
திரும்பிக் கிடைக்கப்போவது இல்லை!

சோதனைகள் சந்தித்து வேதனைகள் தாங்கினோம்
இறுதிப் பரீட்சையின் இறுதி முடிவுடன்
விடை பெற்றோம்!!!

Thursday, May 13, 2010

என் இதயத்தில் உன் நினைவலைகள்


பலரிடம் இருந்து காப்பாற்றி என் இதயத்தை
ஒரு நொடியில் பறித்து சென்றாய் அன்று
நந்தவனத்தில் இன்று நான்
நடை பிணமாய் அலைகிறேன் உன்னை காண்பதற்க்காக

வளைந்தோடும் நதிக்கரைகளில்
அழகிய காற்பாதம் பதித்தோம் நாம்
பூஞ்சோலை பூக்கள் வாடுகின்றன
உன் கை படாமல்

உன்னோடு பேசும் போது
என்னையே மறந்தேன்
உன்னோடு வாழ நினைக்கும் போது
என் வாழ்க்கையை தொலைத்தேன்

உன்னை நினைக்க வைத்து
என் மனசிறையில் சிற்பம் செதுக்கினேன்
யாருமற்ற வெளிகளில் உனக்கு பிடித்த ஓர் பளிங்கு மாளிகை
என்றும் வரவை எதிர்பாத்து........

என் இதய புத்தகத்தை படித்து முடித்த
நீ மெளனமாக சென்றுவிட்டாய்
இப்போது உன் நினைவுகளை சுமந்தபடி
ஒரு முறையாவது சந்திக்க துடிக்கிறேன்

கண்ணீரில் மூழ்கிய என் இதயம்
உன் நினைவுக் கடலில் தத்தளிக்கிறேன்
காப்பாற்ற வராட்டிலும் கடைசியில்
கல்லறைக்கு ஆவது வந்துவிடு!!!