
பலரிடம் இருந்து காப்பாற்றி என் இதயத்தை
ஒரு நொடியில் பறித்து சென்றாய் அன்று
நந்தவனத்தில் இன்று நான்
நடை பிணமாய் அலைகிறேன் உன்னை காண்பதற்க்காக
வளைந்தோடும் நதிக்கரைகளில்
அழகிய காற்பாதம் பதித்தோம் நாம்
பூஞ்சோலை பூக்கள் வாடுகின்றன
உன் கை படாமல்
உன்னோடு பேசும் போது
என்னையே மறந்தேன்
உன்னோடு வாழ நினைக்கும் போது
என் வாழ்க்கையை தொலைத்தேன்
உன்னை நினைக்க வைத்து
என் மனசிறையில் சிற்பம் செதுக்கினேன்
யாருமற்ற வெளிகளில் உனக்கு பிடித்த ஓர் பளிங்கு மாளிகை
என்றும் வரவை எதிர்பாத்து........
என் இதய புத்தகத்தை படித்து முடித்த
நீ மெளனமாக சென்றுவிட்டாய்
இப்போது உன் நினைவுகளை சுமந்தபடி
ஒரு முறையாவது சந்திக்க துடிக்கிறேன்
கண்ணீரில் மூழ்கிய என் இதயம்
உன் நினைவுக் கடலில் தத்தளிக்கிறேன்
காப்பாற்ற வராட்டிலும் கடைசியில்
கல்லறைக்கு ஆவது வந்துவிடு!!!
எல்லோருடைய இதயத்திலும் ஒரு நினைவலைகள் இருக்கும்
ReplyDeleteஉங்கள் இதயத்தில் உள்ளது நல்லாயுள்ளது .......................................