skip to main |
skip to sidebar
என்ன வாழ்க்கையோ !
பயணங்கள் தான்
ஆரம்பித்துவிட்டனவே..
மனது மட்டுமே அறிந்த
உண்மை , பல
வேதனைக்கும் நடுவில்
வெளியில் போடுவது
புன்னகை வேஷம் என்று.
மானிட வாழ்க்கையில்
எல்லாம் கிடைத்தோர்
யார் யாரோ?
அதனால் நிம்மதி
இழந்தவர் யார் யாரோ?
புரிந்த இந்த
வாழ்க்கை பயணத்தில்..
சந்தித்த பல சொந்தங்களில்
பெற்றுக் கொண்டேன்
அதில் ஒரு உறவை.
அறிந்து கொண்டேன்
பாசத்தின் ஆழத்தை.
மனசாட்சி அறிந்தாலும்
மற்றவர்களுக்கு புரியவில்லை
வெளியல் நான் போடும்
வேஷத்தில், என்னை
நானே ஏமாற்றுகிறேன் என்று ......
முடிவு தெரியாத
நம் காதல் பயணத்தில்
மௌனம் சாதிக்கும்
உன் பெண்மை
விலக நினைத்தாலும்
விடைபெற முடியாத
உன் நினைவுகள்
பிரிய நினைத்தாலும்
மீண்டும் பார்க்கத் தூண்டும்
உன் புன்னகை பூத்த முகம்
சண்டை பிடித்தாலும்
சரணடையச் செய்யும்
உன் அன்பு
கண் கலங்கினாலும்
ஆறுதல் சொல்லும்
உன் பாசம்
அன்பே இது தானா
நம் உண்மைக் காதல் ......
விரும்பி கிடைத்த
உன் உறவை,
வெகு விரைவில்
பிரிந்தது என் ஜீவன்..
பொழுதுபோக்காய் நேசித்த
உனக்காக,
உதிர்ந்து போன
என் வாழ்க்கை..
கல் நெஞ்சம் படைத்த
உனக்காக,
கடைசி வரை உன்னையே
சுற்றி வந்த பாதங்கள்..
உன்னை காதலித்த
பாவதிற்காய்,
கண்ணீர் சிந்துகிற
என் இதயம்..
இன்று அநாதையானாளும்
இனிமையா இருக்கிறது,
உன் நினைவுகள்
கடைசிவரை
என் கூடவே இருப்பதால்..
என் மனதை கொள்ளையிட்டவளே
என் வாழ்க்கையின்
அர்த்தத்தை உணர்த்தியவளே
உன்னால் என் மனதில்
ஆசை காட்டி வளர்த்த
இந்த புதிய உறவு ...
என்மீது நீ வைத்த
ஆழமான அன்பு
என்னுள் காதல் பயிரை
வளர்த்துவிட்டதடி..!
உன்னை பார்த்த
என் கண்களின் சந்தோஷம்...
நீ என்னுடன் பேசிய
அந்த சில நொடிகள்...
என் உயிரினில்
ஆழமாய் பதிந்ததடி..!
கனவில் மலரும்
என் காதல் நினைவுகள் கூட
நிஜமானது உன்னால்...
உறக்கத்தை பறி கொடுத்து
உறவுகள் சிதறடித்து
மலர்ந்த இந்த உண்மை காதலால்..!
பிறந்தேன் மறுபடியும்
உன்னிடத்தில்
காதல் ஏக்கங்களோடு...
என் வாழ்வில்
இத்தனை சுகங்களும்
உன்னால் தானடி...!
இவையெல்லாம் தந்த
உன் இனிய உறவு
எனக்கு உயிரல்லவா...
உன் உறவை பிரியும் தருணத்தில்
என் உயிரும் பிரியும் அவ்விடத்தில்...
முகத்தில் புன்னகை பூத்தாலும்
உள் மனதில் அழுகிறேன்
தினம் தினமும்...
தேவாதி தேவனே
எனக்கு மட்டும் ஏன்
பல சோதனைகள்
வாழ்நாள் முழுவது...
என் சின்னச் சின்ன
சந்தோஷத்திற்க்கு கூட
கனவுகள் பலித்ததில்லை...
என் மன ஆறுதலுக்காவது
ஒரு சிறு வெற்றி கூட
இதுவரை கிடைத்ததில்லை...
காலங்கள் சென்றாலும்
வலிகள் சிறிதும் குறையவில்லை...
காயங்கள் எதுவும்
மாறவில்லை ...
கடவுளே இன்னும்
ஏன் இந்த வாழ்க்கை ?
பெண்ணே
இதயங்களுக்குள் அன்பு பரிமாறி
பாசத்தால் பின்னிப் பிணைந்து
வாழ்கையில் ஆசைகள் வளர்த்த
நம் காதல்
இன்று காணல் நீராய் போனதடி
அன்பே
நாம் காதலில் இனிமையாக
வாழ்ந்த காலம் சில காலம் ஆனாலும்
அவை எல்லாம் வெறும் கனவுகள் என்று
மறக்க முடியுமா
என்னவளே
நீ என்னை பிரிந்தாலும்
பூவை விட மென்மையான உன்னை
என் ஆயுள் காலத்தில்
மறக்க முடியுமா
இதயமானவளே
என் வாழ்வில் சோகம் நிறைந்தாலும்
நித்தமும் நினைவூட்டும்
உன் நினைவுகளை
மறக்க முடியுமா
என் உயிரானவளே
இவற்றை மறக்கும் என்னம்
என் ஜீவனுக்கு இல்லை
அப்படி மறந்தால்
என் ஜீவன் இவ்வுலகில் இல்லை