skip to main |
skip to sidebar
நித்தமும் உன் நினைவுகளையே
சுமக்கின்ற என் நெஞ்சு,
உன் வரவினை எதிர்பார்த்து
எத்தனை கனவுகள்...
உன் மனதை புரிந்ததனால்
உன் குறும்புகளை ரசிக்கும்
ரசிகனானேன்
உன் நினைவுகளோடு இருப்பதனால்
உன்னை காக்கும்
காவலனானேன்
கனவுகளில் நீவந்து
ஆசைகளை தூண்டிவிட்டாய்
கற்பனைகளிலே
சிற கடித்து பறக்கிறேன்
மலரே
உன் மனதில் இருப்பதை
மௌனத்தால் மறைத்தும்
என் அசைவுகள் அனைத்தும்
உன்னை நாடியே...
நான் உயிரோடு வாழ்வது
உனக்காகவே...
உன் காதல் தந்த சோதனையால்
என் நினைவுகள் அனைத்தும்
உன்னைப் பற்றியே. . . .
உள்ளுக்குள் அழுகிறேன்
நீ படரச் செய்த பாசத்தால். . . .
வெளியிலே சிரிக்கின்றேன்
என்னை வெறுக்கும் உறவுகளை நினைத்து
என் உணர்வுகளை புரிந்த நண்பர்களும்
என்னருகே இல்லை
என் உயிரோடு கலந்த நீயும்
என்னிடத்தில் இல்லை
உன்னுடன் பழகிய நாட்கள்
உன் நினைவுகளோடு
வாழ்ந்த காலம்
இவை அனைத்தையும்
கனவென மறக்க நினைக்கிறேன்
மறுகனமே வேண்டாம் என்கிறது
என் உண்மை காதல்......
உன்னை மறக்க நினைக்கின்றேன்
மனதில் அமைதியில்லை. . . .
உன்னை வெறுக்க முயல்கின்றேன்
வாழ்வில் நிம்மதியில்லை. . . .
உன் நினைவுகளை அழிக்கத் துடிக்கிறேன்
இரவுகளில் தூக்கமில்லை. . . .
வெளியிலே சிரித்து நடித்தாலும்
உள் காயங்கள் ஆறவில்லை. . . .
விடியல்களில் ஏக்கங்களுடன் காத்திருந்து
ஏமாற்றத்துடன் விடைபெறுகின்றன. . . .
அன்று சந்தோஷமாய் இருந்த சில நொடியை விட
இன்று சுமையாய் இருக்கும் உன் நினைவுகள்
என்றுமே சுகமானவை . . . .
என்னுயிர் வான்மதியே. . .
உன் இளமை தீண்டியதால்
நான் சிக்கித் தவிக்கின்றேன்...
என்னைக் கேளாமலே
என் இதயச் சுவர் எங்கும்
உன் நினைவுகளை
நிரப்பிவிட்டாய்
என் செல்லமே
அன்று
தென்றலாய் வந்தாய்
என்மனதை கொள்ளையடிக்க
தேனாக சுவைத்தாய்
இதயத்தில் சிறைவைக்க
இன்று
தொலை பேசி அடித்தாலும்
நீ தான்
ஈமையில் பார்த்தாலும்
உன் வரிகள்- என்று
என் மனம் அலைமோதுகின்றது
என் உயிர் செல்லமே ,
எண்ணங்களை கவிதையாக்கி
உன்னிடத்தில் சமர்பிக்கின்றேன்
நீ என்மீது கொண்ட காதல்
உண்மையானால்
என்னிடம் வருவாயா ????