skip to main |
skip to sidebar
காலம் கடந்த பின்னும்
கண்ணுக்குள் உன் காதல் மட்டும்
கடல் கடந்த தூரத்தில் இருத்தும்
நெஞ்சுக்குள் உன் நேசம் மட்டும்
எனக்கு சொந்தமாவதில்லை என அறிந்தும்
கனவில் நீ பேசிய வார்த்தைகள் மட்டும்
உனக்காக துடிக்கும் இதயத்தின் நினைவில்
உன் புன்னகை பூத்த முகம் மட்டும்
இணைவோம் என காத்திருக்கும் எனக்கு
தினமும் ஏமாற்றம் மட்டுமே . . . . . .
யாருமற்ற இந்த நிலாவொளியில்
உன் நினைவுகளையே
அள்ளித்தரும் தருணம்
நான் தனிமையில் தவிக்க
துணைக்கு ஆறுதல் சொல்ல
தொலைபேசியில் கசியும்
உன் குரல் ....
இந்த இரவினில்
ஏக்கங்கள் அதிகரித்தாலும்
பனிக் குளிரில்
உடல் நடுங்கினாலும்
எனக்கு தனிமை புலப்படவில்லை
நீ நெஞ்சிலே வாழ்வதனால்....
தோழியாய் நீ
எங்கும் கூடவரும் போது
எனக்கு தெரியவில்லை
உன் நேசம்
காதலியாய் நீ
தொலைவினில் காத்திருக்க
என் மனசே தாங்கவில்லை
உன் தவிப்பை கண்டு....
உன்னைக் காணும் வரை
காதல் ஆசை இல்லை
என் மனதில்
உன்னை சந்தித்த பின்
என் இதயமோ என்னிடம் இல்லை ....
அன்பால் உள்ளத்தை இணைத்து
பாசத்தால் உணர்வுகளை பகிர்ந்து
கனவுகளில் ஆசை வளர்த்து
எண்ணங்களை கவிதையாக்கி
காதல் மழையாய் பொழிந்து
விலகிச் சென்றாய்
என்னிடமிருந்து ....
மனதை பறிகொடுத்த
முதல் சந்திப்பில்
நீ இசைத்த இதயராகம்
இன்றும் என் மனவாசலில்
ஒலித்துக் கொண்டிருகிறது....
என் உயிரே
உன்னிடத்தில் நம் காதல்
உதிராது இருக்கும் வரை
வாழப் போகும் சில நாட்களுக்காக
ஏழு ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருபேன்
இல்லையேல்
நீ பேசிய காதல் மொழியோடு
காற்றுடன் சங்கமிப்பேன் . . . .
என்னவளே !!!
இந்த அப்பாவி மனதில்
அமைதியாய் குடிகொண்டாய்..
கற்பாறையாய் இருந்த என் இதயத்தில்
காதல் ரோஜாவாய் மலர்ந்தாய்..
என் இரவுகளை களவாடி
உறக்கத்திலும் தொந்தரவு செய்தாய்..
மௌன மொழி போசி
உன் வெறுப்பை வெளிக்காட்டினாய்..
என்றும் உனக்காக நான் மட்டும் தான் என
தினமும் உன் நினைவாலே ஏங்க வைத்தாய்..
என் உயிரில் கலந்தவளே
ஆயுள் முழுவது உனக்காக வாழ்ந்தாலும்
அதில் ஒருநாள் உன்னோடு வாழ்ந்தால்
போதும் கண்ணே..