Monday, March 28, 2011

இதயத்தின் வலிகள் . . . . . .


அன்பே இன்று என்னருகே நீ இல்லை
உன் இதயத்திலும் நான் இல்லை
என் இதயத்தில் நீ இருந்தும்
என்னிடத்தில் எதையும் நீ பகிர்ந்ததில்லை

அன்று உன்னைப்போல் எவருக்கும்
என் மீது இரக்கம் இல்லை அன்பே,
இருந்தும் இன்று நீ எதையும் புரியப்போவதில்லை
இதை நான் அறிந்தும்
உன்னை என்றும் வெறுக்கப்போவதில்லை

என் இதயம் வலி தாங்கினாலும்
உன் நினைவுகளை மறக்கப்போவதில்லை
அன்பே,என்னை நீ பிரிந்து சென்றாலும்
உன் நினைவுகள் என் இதயத்தை விட்டுச் செல்வதில்லை

நம் அழகான காதலில்
அழியாத சோகம் தந்தவள் நீ
அதை அறிந்தும் உன்னையே
நேசித்திதுக் கொண்டிருப்பவன் நான்

நீ பேசமாட்டாய் என்று தெரிந்தும்
உன்னோடு பேசுவதற்காக
தினம் தினமும் துடித்துக்கொண்டிருப்பவன் நான்
மௌனமாய் நீ சென்றாலும்
காலம் எல்லாம் காத்திருப்பவன் நான்

அன்பே, கனவெது நினைவெது புரியாது
விடியாத இரவுகளோடும்
முடிவில்லா உன் நினைவுகளோடும்
விடை பொறாமல் தவிக்கின்றேன்

மறக்க முடியாத உன் பிரிவு. . . . . .


கடல் கரைகளில் உன் கைகோர்த்து நடந்த
பொன்மாலை பொழுதுகள்
உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய
அந்த குளிர் இரவு
இருவரும் ஒரு குடையில் சென்ற
மழைக் காலங்கள்
உன்னுடன் மட்டுமே சேர்ந்து சென்ற
தொலை தூர பயணங்கள்
நீ தொலைபேசியில் பேசிய
அந்த சில நிமிடங்கள்
இரவுகளில் உன்னையே நினைத்து
தூங்காது விழித்திருந்த என் விழிகள்
நிலவுகளில் நீ எனக்காக
எழுதிய கவிதைகள்
உனக்காக காயப்படுத்திய
என் உறவுகள்
உனக்காக என்றும் வேண்டி
நித்தம் தொழுத என் உள்ளம்
உனக்குள் தொலைக்கப்பட்ட
என் உயிர்
இவை எல்லாத்தையும்
ரணப்படுத்திணாய் அன்பே
பிரிவு என்னும் ஒரு சொல்லில். . . .


இன்று இதயம் என்னும் கல்லறையில் வசந்தமான உன் நினைவுகள்
மட்டுமே என் வலிகளுக்கு ஆறுதலாய்......

Tuesday, March 22, 2011

அன்பே உன் பதில் வேண்டும்


என்னை காக்க வைத்த நீ

தனிமையில் அங்கு

உனக்காக காத்திருந்த நான்

தவிர்ப்புக்களில் இங்கு

உன்னையே எண்ணிய எனக்கு

சுற்றி நிகழும் நிஜங்கள் கூட நிழலாய்

உதடு பிரியாத புன்னகையிலும்

ஆடம்பரமில்லா வெட்கத்திலும்

உன் அன்புக்கு அடிமையாகி

எனது இதய நதியில் ஓடமாய்

ஓடிக் கொண்டே இருக்கும் உன் நினைவுகளை

கவிதைகளாக உனக்கு எழுதினேன்

உன் இதயத்தில் எனக்கோர் இடம் கேட்டு

அன்பே, காதலை நேசிக்கும் உன்னிடம்

பகிர்ந்துள்ளேன் என் உணர்வுகளை

பதிலை தந்திடு . . . . . .

Wednesday, March 16, 2011

என்றும் உன் நினைவில் . . . . . .


அன்பே உனக்காக வாழ நினைத்த போதெல்லாம்
உதாசீனப்படுத்தி பைத்தியம் என்றாய்
இன்று உன்னை பிரிந்து உன் நினைவோடு
வாழும் போது பாவம் என்கிறாய்

உதட்டில் நீ மறைத்தாலும்
உன் மனதில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ என்னை வெறுத்தாலும்
என் இதயம் இயக்கும் வரை
உன்னை காதலித்துக் கொண்டிருப்பேன்

உன்னை நேசித்த இதயத்தை
இலகுவாக பிரித்த உனக்கு
இதயத்தின் வலியை மட்டும் எப்படி உணர்வாய்

உன்னுள் என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் என்று
தூங்காத இரவுகளோடு
துணைக்கு நீ இன்றி
ஏங்கித்தவிக்கிறேன் . . . .

என் நண்பா ......


எங்கிருந்தோ வந்தேன்...
நட்பு என்னும் பாலத்தால்
நண்பன் என்னும் உன் உறவை பெற்றேன்

ஆழமாய் துளிர்விட்டு
அழகாய் பூத்தது நம் நட்பு
அந்த நட்பு என்னும் நந்தவனத்தில்
நெடுங்காலம் இணைத்திருந்தோம்

வாழ்க்கை என்னும் பயணத்தில்
துன்பமாய் உன்னை பிரிந்து
மொழி தெரியாத ஊரில் வாழ்ந்தாலும்
என் இதயம் என்னும் இயந்திரம் இயங்கும் வரை
உன் நட்பு என்னும் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பேன்



என்றும் உன் தோழனாய் சேது . . . . .

எனக்குள்ளே உயிராய் வாழும் உன் காவியமே . . . . .


என் இதய பூந்தோட்டத்தில் மலர்ந்த ரோஜாவே
கடல் கரையில் உன்னுடன்
கெஞ்சி அழுத இரவுகளும்
பேசிய பழகிய நாட்களும்
இன்று என் மனசுக்குள் கண்ணீர் காவியமாய்

என் மீது அளவற்ற அன்பு காட்டி
வலிகளுக்கு கண் கலங்கினாய்
உனக்கு நிகர் யாரும் இல்லை எனக்கு,
என்று நீ அறிந்து அநாதையாய் விட்டு விலகினாய்

இன்று என் மனசுக்குள் நான் படும் வேதனைக்கு
உன்னை தவிர யாருக்கும் தெரிவதில்லை
என் விரல் பிடித்து நீ துடைத்த மணல்களும்
நீ எழுதிய கவிதைகளும்
என் கண் முன்னால்

நீ கடல் தாண்டி இருந்தாலும்
என் மனதில் தினமும் கலையாத கனவுகளில்
என் அருகில் இருந்த முழுநிலா தொலை தூரத்தில் சென்றாலும்
தனிமையில் உன் நினைவுகளுடன் உன் கால் தடத்தில்
தினமும் உன் வரவை எதிர் பார்த்து காத்திருகிறேன்