Thursday, February 13, 2020

புதிய உறவு




பல வருட கனவு
சில தடைவை நொறுங்கியது
இருந்தும் மீண்டும் கனவை
நோக்கிய பயணம்

ஒவ்வொரு வினாடியும்
மிகுந்த கவனிப்புடன் மிக
நீண்ட பயணம் அந்த ஒரு
நாள் எதிர் பார்த்து

குடியேறிய நாட்டில் இருந்து
தாய்நாட்டுக்கு வந்து மருத்துவ சிகிச்சை
மீண்டும் குடியேறிய நாட்டுக்கு பயணம்
கனவை நோக்கி

அனைத்து நவீன வசதி
இருந்தும் கடவுள் பிரார்த்தனை
கரம் பிடித்தவன் காரில் பின் தொடர
அதிவேக நெடுஞ்சாலையில்
ஆம்புலன்ஸ் இல் பயணம்

உன்னை ஈன்றவள்
உனக்கு ஆறுதல் சொல்ல
எதோ தப்பாயிற்று
கனவு கானல் நீர் ஆகிடுமோ
எனும் பதற்றம்
வைத்தியசாலையை நோக்கி   

ஒரு அறையில் சில நிபுணர்
ஒரே நிற ஆடையில் சில நிமிட
கலந்துரையாடல்
உன்னை அழைத்து வந்தவர்கள்
அறையின் வெளியில் 
 சில நிமிடம் கடந்து

சுற்றி வர உள்ளோர்  மகிழ்ச்சி கடலில்
ஈன்றெடுத்த நீயோ வேதனை உச்சத்தில்
உன் மயக்கம் தெளிய பல மணிநேரம்
என்று சொன்ன மருத்துவ விஞ்ஞானம்
கூட தோற்று போனது
மழலையின் அழுகுரல் கேட்ட
மறுகணம் நீ கண் விழித்துப் பார்ததில்

விருந்தினர் அனைவரும் குழந்தையை
அரவணைக்க
பெற்றெடுத்தித்த நீ தன்னந்தனியாய்
கட்டில் படுக்கையில்

இவ்வளவு வேதனையிலும்
ஒரு ஆனந்த சிரிப்பு
எதிர்பார்த்து நடந்திடுச்சு
கனவு நனவாகியது என்பதில். . . .

Wednesday, August 7, 2019

காதல் உணர்வு



திரையில் மட்டும் ரசித்த காதல்
தினமும் உணர்கிறேன் உன்னால் இப்போ
யாவும் நிஜமா என்று
என்னையே கேட்கும் என் மனசு..

வெற்று பக்கங்களாக
ஊசலாடிய என் வாழ்க்கை
புத்தகத்திற்கு வண்ண
முகவுரை எழுதத் தொடங்கியவளே.. 

தனிமையில் தத்தளித்த எனக்கு
உரசிய உன் இதழ்களில்
பற்றியது என்னுள்
காதல் தீ..

உன்னுடனான உரையாடலை
மட்டுமே விரும்பும் எனக்கு
உன் மௌனம் கூட
இனிமையான ரணம் தான்..    

Friday, August 2, 2019

நவீன காதல்

 இணையத்தின் ஊடக வைரஸ் பரவும் என்பது
 நான் கற்ற தொழில்நுட்ப அறிவியல்
 உன்னுடனான உரையாடலின் பின்தான்
 உணர்கிறேன் இதயத்திற்கு
 காதல் ஊடுருவும் என்ற உளவியல்

 கடல் சூழ்ந்த சிறு நிலத்தில்
 தொழில் நிலை கைதியாய் நான்
 முதுகலை முடிக்கும்
 பட்டத்து இளவரசி நீ 

நம் தூரத்தின் இடைவெளியை குறைக்க
காணொளியில் நித்தமும் கதைபேசல் 
என் தவிர்ப்புகளுக்கு கானல்
இரைபோடும் உன் குரல் செய்திகள்

எல்லைகள் மீறும் நாகரீகத்திலும்
கண்ணியம் தவறாத நம் உறவு
என் இறுதி துடிப்பு வரை உடையாமல் இருக்க
வேண்டுகிறேன் இறைவனை
அருள் கொடுப்பாயா என் தேவதையே....

Sunday, November 20, 2011

ஏமாற்றம்


காலம் கடந்த பின்னும்

கண்ணுக்குள் உன் காதல் மட்டும்

கடல் கடந்த தூரத்தில் இருத்தும்

நெஞ்சுக்குள் உன் நேசம் மட்டும்

எனக்கு சொந்தமாவதில்லை என அறிந்தும்

கனவில் நீ பேசிய வார்த்தைகள் மட்டும்

உனக்காக துடிக்கும் இதயத்தின் நினைவில்

உன் புன்னகை பூத்த முகம் மட்டும்

இணைவோம் என காத்திருக்கும் எனக்கு

தினமும் ஏமாற்றம் மட்டுமே . . . . . .

Tuesday, November 1, 2011

உன் தவிப்பு


யாருமற்ற இந்த நிலாவொளியில்
உன் நினைவுகளையே
அள்ளித்தரும் தருணம்
நான் தனிமையில் தவிக்க
துணைக்கு ஆறுதல் சொல்ல
தொலைபேசியில் கசியும்
உன் குரல் ....

இந்த இரவினில்
ஏக்கங்கள் அதிகரித்தாலும்
பனிக் குளிரில்
உடல் நடுங்கினாலும்
எனக்கு தனிமை புலப்படவில்லை
நீ நெஞ்சிலே வாழ்வதனால்....

தோழியாய் நீ
எங்கும் கூடவரும் போது
எனக்கு தெரியவில்லை
உன் நேசம்
காதலியாய் நீ
தொலைவினில் காத்திருக்க
என் மனசே தாங்கவில்லை
உன் தவிப்பை கண்டு....

என் விருப்பம் . . .


உன்னைக் காணும் வரை
காதல் ஆசை இல்லை
என் மனதில்
உன்னை சந்தித்த பின்
என் இதயமோ என்னிடம் இல்லை ....

அன்பால் உள்ளத்தை இணைத்து
பாசத்தால் உணர்வுகளை பகிர்ந்து
கனவுகளில் ஆசை வளர்த்து
எண்ணங்களை கவிதையாக்கி
காதல் மழையாய் பொழிந்து
விலகிச் சென்றாய்
என்னிடமிருந்து ....

மனதை பறிகொடுத்த
முதல் சந்திப்பில்
நீ இசைத்த இதயராகம்
இன்றும் என் மனவாசலில்
ஒலித்துக் கொண்டிருகிறது....

என் உயிரே
உன்னிடத்தில் நம் காதல்
உதிராது இருக்கும் வரை
வாழப் போகும் சில நாட்களுக்காக
ஏழு ஜென்மம் வேண்டுமானாலும் காத்திருபேன்
இல்லையேல்
நீ பேசிய காதல் மொழியோடு
காற்றுடன் சங்கமிப்பேன் . . . .

காதலின் ஏக்கம் . . . . . .


என்னவளே !!!
இந்த அப்பாவி மனதில்
அமைதியாய் குடிகொண்டாய்..
கற்பாறையாய் இருந்த என் இதயத்தில்
காதல் ரோஜாவாய் மலர்ந்தாய்..
என் இரவுகளை களவாடி
உறக்கத்திலும் தொந்தரவு செய்தாய்..
மௌன மொழி போசி
உன் வெறுப்பை வெளிக்காட்டினாய்..
என்றும் உனக்காக நான் மட்டும் தான் என
தினமும் உன் நினைவாலே ஏங்க வைத்தாய்..
என் உயிரில் கலந்தவளே
ஆயுள் முழுவது உனக்காக வாழ்ந்தாலும்
அதில் ஒருநாள் உன்னோடு வாழ்ந்தால்
போதும் கண்ணே..