skip to main |
skip to sidebar

சந்தித்த உள்ளத்தில்
என் இதயத்தை தொலைத்து விட்டு
மனதில் பல ஏக்கங்களோடு
என் கனவிலும் கலையாத
உன் திருமுகத்தை காண
தினம் தினம் தவிக்கிறேன்
பூக்கின்ற பூக்கள் எல்லாம்
வாடாமல் இருப்பதில்லை
வாடுகின்ற மலர்கள் எல்லாம்
உதிராமல் இருப்பதில்லை
என்னவளே உன்னால் என்
மன பூங்காவில் மலர்ந்த
காதல் பூ என்றுமே உதிராதடி
உனக்கான என் தேடல்
ஒரு காணல் நீரென்று தெரிந்தும்
உன்னையும், உன் நினைவுகளையும்
இன்னும் நேசிக்கின்றேன்
ஒன்று சேர்க்க
முடியாத நம் ஜீவன்களால்
நிம்மதி இல்லாத
என் வாழ்க்கை
தொடர்கின்ற சோகங்களை
சொல்லி அழ என்னருகே
நீ இல்லையே என்னவளே
அன்பே, உயிரோடு கலந்த
உன்னை மறக்க
என் மனதிற்க்கு தெரியவில்லை
குழப்பங்கள் என் மனதில் இருந்தாலும்
உனக்கு எந்த வலியையும் தரவில்லை
என் உள்ளத்தில் சோகம் நிறைந்தும்
உன் சந்தோஷத்தை கலைக்கவுமில்லை
இதை அத்தனையும் நீ உணர்ந்திருப்பாய்
உன் சம்மதம் ஒன்றுக்காக
நான் படும் வேதனைகளை
யாரிடம் சொல்ல
தனிமையில் வாடிய
என் மீது அளவற்ற பாசத்தை காட்டி
ஏன் விலகி சொல்லுகிறாய்
நிரந்தரமில்லாத உறவுகளுக்காய்
உண்மையான நம் காதலை
என் புறக்கணிக்கிறாய்
என் உயிரே
நான் மறு ஜென்மமும்
உன்னோடு வாழ்வதோ
இல்லை மறுகணமே
மரணிப்பதோ
உன் பதிளில் தானடி. . . . . .
உன்னுடனான நினைவுகள் தான்
எவ்வளவு சுகமானது
உன் கை பிடித்து
கடற் கரையில் நடந்த நாட்களும்
உன் மடி சாய்ந்து தூங்கிய
ரயில் பயணங்களும்
பொன் மாலை பொழுதுகளில்
நீ, என் தோள் சரிந்து
பாடிய பாடல்களும்
நாம் மெய் மறந்து மணிக்கணக்கில்
பேசிக் கொண்ட நிலாக் காலங்களும்
இடி மின்னலுக்கு நீ என்னை இறுக
கட்டியனைத்த மழை நேரங்களும்
இரவுகளில் தூங்காமல்
இருவரும் இடை விடாது பரிமாறிய
குறுஞ் செய்திகளும்
நான் தாமதித்து வந்தால்
நீ என்னோடு புரியும்
செல்லச் சண்டைகள்
இவை அனைத்து
நம் பிரிவிலும்
சுகமான நினைவுகளாக
என்றுமே கலங்காமல் இருப்பவை
என் மனக்குளத்தில்
காதல் கல் வீசி
மனதை கலங்க வைத்தவளே
அறியாமல் செய்த காதலில்
அழியாத சோகம் தந்து
மறைந்து சென்றவளே
ஏனடி இவ்வளவு
நீண்ட இடைவெளி ......
உன்னை கனவிலும்
கண் கலங்கவிடாத
என் ஜீவனை
கொல்லாமல் கொல்கிறாய்
உனக்கு ஏதடி பாசம்......
என்னைப் பல இதயங்கள் நேசித்தாலும்
என் உயிர் தேடும் உறவு
நீ மட்டும் தனே என்னவளே
அதை நீ ஏன் அறியாத
வேஷம் போடுகிறாய்......
அன்பே , என் மரணத்திலாவது
நம் காதல் உயிர் வாழுமானால்
நீ மனம் தடுமாறாது
என்னை கொன்றுவிடு
நம் காதல் ஆவது
நிம்மதியா வாழட்டும்......
உன் பார்வையால்
என் இதய தேசத்தில் இடம் பிடித்தவளே
உன்னுடன் கழியும்
ஓவ்வொரு நொடியிலும்
உன்னோடு ஜோடி சேர்ந்து
வானில் பறக்கின்றேன்
கனவிழும் கற்பனை வளர்த்து
இரவுகளில் தூக்கத்தை தொலைத்து
நிலவுகளில் உன் படத்துடன் கதை பேசி
நினைவுகளை கவிதையாக்கி
நிமிடங்களில் என்னை மறக்கிறேன்
உன்னைப் பார்த்த முதல் நொடியில் இருந்து
இருக்கும் காலம் முழுவதும்
உனக்காக வாழ்கிறேன்
பிரியமே ,
புரியாத உன் இதயத்திற்கு
அழியாத நம் காதலை
அணையாமல் எரிக்கின்றாய்
நெருப்பாலும் அழிக்க முடியாத
உன் நினைவுகளோடு
அழகிய நந்தவனத்தில்
அநாதையான பறவையா நான்
இன்று தனிமையில் தவிக்கிறேன்
சுவாசிக்கும் வரை காற்றை நேசிப்பேன்
தூங்கும் வரை நிலவை நேசிப்பேன்
கற்பனை உள்ளவரை கவிதையை நேசிப்பேன்
கரையைத் தொடும் வரை கடல் அலையை நேசிப்பேன்
விண்மீன் மறையும் வரை வானை நேசிப்பேன்
பூக்கள் வாடும் வரை நந்தவனத்தை நேசிப்பேன்
பாசம் உள்ளவரை உறவுகளை நேசிப்பேன்
நினைவுகள் உள்ளவரை நண்பர்களை நேசிப்பேன்
கல்லறை செல்லும் வரை காதலை நேசிப்பேன்
உயிர் உள்ளவரை நட்பை நேசிப்பேன்