Monday, July 11, 2011

உன்னை ஒரு போதும் வெறுக்க மாட்டேன் . . . . . .


தெரியாத போது

ஆசைப்பட்டு அணைத்த என்னை

தெரிந்த போது

தெருவில் உதறி விட்டாய்

உறவாக நீ பேசிய வார்த்தைகளில்

உலகமே நீதான் என்று

மனம் மகிழ்ந்தேன் அன்று

என் உயிரே என்னை

உதறிய போது

உணர்வுகளை ஊமையாக்கி

மரணித்துக் கொண்டிருக்கிறேன் இன்று

நீ பேசிய வார்த்தைகளை

கவிதைகளாக சுவாசித்து

நீ எழுதிய கடிதத்தை

என் கல்வெட்டாக படித்துப் பார்க்கிறேன்

மனதிற்க்கு வலி தந்தாலும்

என் இனிய உறவாக இதயத்தில்

நினைத்துக் கொண்டிருக்கின்ற உன்னை

ஒரு போதும் வெறுக்க முயர்ச்சிக்க மாட்டேன்

என் உயிர் காதலியே . . . . . .


நீ எனக்கு சொந்தமில்லாதவள் என்று
என் மனம் அறிந்தும்
உனக்காகவே என் இதயம் துடிக்கிறது
அன்பே உன்னை மறக்க நினைத்தால்
மரணிக்க துணிகிறது என் மனம்
நீ என் கனவு தேவதையாக
காலம் முழுவது என் இதயத்தில் இருந்தாலும்
நான் தான் உன் காதலன்
என்று மீண்டும் கேட்க
எனக்கு நம்பிக்கையில்லை
நீ இதை புரிந்து கொண்டாலும்
திரும்பி வர உனக்கு தைரியம் இல்லை
அன்பே எந்த தவறும் செய்யாமல்
அணு அணுவாய் தண்டனை
அனுபவிக்கின்ற பாவியாய் நான்

தனிமையில் தவம் இருந்தும்
என் மனம் உன் நினைவுகளில் இருந்து
விடுபடவில்லை
அன்பே காலங்கள் பல கடந்து
நான் கல்லறை சென்றாலும்
என் உயிர் காதலி நீ தான்

புரியவில்லையா உனக்கு


உன் நினைவுகளை நினைக்கும் போது
கனவுகளில் விழுந்து போகின்றேன்
நீ என் அருகில் இல்லாத போது
என் வாழ்வில் நிம்மதியை இழந்துவிடுகின்றேன்
உன்னை எண்ணித் துடிக்கும்
என் மனத்திற்க்கோ
விலகிக் கொள்ளத் தெரியவில்லை

உன்னை புரிந்து கொண்டாலும்
என்னை பிரிந்து சென்ற
உன்னை மட்டுமே உலகம் என
வேதனை கொண்டு வாழும்
என் ஜீவன்
தூக்கத்திற்க்கு சென்றாலும்
தூங்காமல் தவிர்க்கிறன்து
உன்னை நினைத்து

நினைக்காத பொழுதுகளிலும்
நிலையாக என் இதயத்தில்
நிறைவாக வீ ற்றிருக்கும்
உன் நினைவுகளை தான்
நீ என் மனச் சிறையில்
இருந்த தருணத்திலும்
புரிந்து கொள்ளவில்லையா

நானும் ஒரு அநாதை


எழுத படிக்கத் தெரியாத வயதினில்
தெருவோர வாழ்கையும்
சிந்திக்க தெரியாத வயதினில்
சந்தித்த சோதனைகளும்
கிழிந்த இலையில்
எச்சில் உணவும்
கரம் கொடுக்க யாருமின்றி
தள்ளாடும் கால்களும்
பெற்றவர்களை தெரியாமல்
சகோதர பாசம் அறியாமல்
பசி வயிற்றை கிள்ள
சிந்துகின்ற கண்ணீரும்
ஆயிரம் தடவை அழைத்தாலும்
அணைதுக் கொள்ள யாருமின்றி
தூங்கிய பொழுதுகளும்
சந்தோஷமே தெரியாமல்
காலங்கள் பல கடந்து
வலிகளும் தொடர்கின்ற வேளை
புரிந்து கொண்டேன் இன்று
நானும் ஒரு அநாதையென்று . . . . . .

என் அன்புள்ள ராட்ஷசி


என்னவளே அன்று தேவதையாய் வந்து
என் இதயத்தை பறித்து சென்றாய்
இன்று தெருவோரம்
தனிமையில் துடிக்கும் போது
ஒன்றும் தெரியாத ராட்ஷசியாய்
ஒதுங்கி செல்கிறாய்

நீ என்முன் ராட்ஷசியாய் நடித்தாலும்
நிஜத்தில் என்மீது உண்மையான
அன்பு செலுயத்தியவள்
உன் உள் மனதை புரிந்துகொண்ட எனக்கு
என்றுமே என் உயிர்த்
தேவதை நீயடி

சின்ன சின்ன காரணங்கள் சொல்லி
என்னுடன் செல்லச் சண்டையிட்டு
தொலைதூரம் சென்று
எனக்காக காத்திருக்கும்
என் அன்புள்ள ராட்ஷசியை
உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன்

அன்பே சொல்


நீ பெண்ணாக பிறந்தாய்
என் இதயத்தை களவாடவா
பூவாக மலர்தாய்
என் வாழ்வை வசந்தமாக்கவா
உறவாக இணைத்து கொண்டாய்
துன்பங்களை பகிர்ந்துகொள்ளவா
வார்த்தைகளால் கவி பாடினாய்
என் வாலிபத்தில் காதல் கொள்ளவா
தென்றலாய் வருடிச் சென்றாய்
என் உணர்வுகளை புரிந்து கொள்ளவா
சொல் அன்பே சொல் . . . . . .