skip to main |
skip to sidebar
பாசம் என்னும் போதைக்கு
பலியாகிய நம் இதயங்களை
சிதறடித்தாய் இன்று,
சிந்துகின்ற கண்ணீரில் கழுவிப்பாக்கின்றேன்
காதலித்த தருணங்களை
அர்த்தம் இல்லாத என் வாழ்க்கையில்
வழி தவறிய வேளை
வழி காட்டியாய் வந்தவளே
உன் திரு முகத்தை பார்த்த வேளை
முழுதாய் சரண் அடைந்த்தேன் உன்னிடத்தில்
தூங்காத இரவுகளில் இணைந்த இதயங்களை
நினைத்து நித்தம் நித்தம் பல கனவுகள்
உன்னை காதலித்த போது
கரை ஒதுக்கிய நண்பனையும்
காயப்படுத்திய பெற்றோரையும்
இன்றுவரை நினைத்ததில்லை
உன்னை தேடும்வரை
உடல் வாடுவதில்லை
உன்னோடு பேசும் வரை
என் உள்ளம் சோர்வதில்லை
என்னை கண்டவுடன்
உன் புன்னகைக்கு நிகர்
ஏதும் இல்லை எனக்கு
என் இதயத் தோட்டத்தில் மலர்ந்த
காதல் ரோஜாவே
இதமான பொழுதுகளில்
உன்னோடு இன்பமான பயணங்களும்
எல்லையில்லா சந்தோசங்களும்
கல் முள் நிறைந்த பாதைகளில்
கண்ணீர் சிந்தாத நம் இதயங்கள்
கொட்டும் மழையினிலும் இணை பிரியா ஜீவன்கள்
இன்று துணைக்கு யாரும் இன்றி
தனிமையில் துடிக்கின்றது
என் உயிரே
நம் அழியாத காதலுக்கு
முடியாத சோகம்தனை
கல்லறை வரை சுமக்கின்ற
இந்த உயிருள்ள காதலனை மறந்து விடாதே. . . .
எங்கிருந்தோ வந்தாய்
எனக்கு சில நாள் சந்தோசம் தந்து
வாழ் நாள் முழுக்க சோகம் தந்தாய்
பல அதிர்வுகளை தாங்கியும்
புண் படாத இதயத்தை
சில நொடிகளில் சிதறடித்தாய்
என்மீது பாசத்தைக் காட்டி
என் மனதை திருடியவளே
குளிர் இரவிலும்
அணு அணுவாய் சுடுகின்றது
நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இதயம் சிந்துகின்றது
உதிரத் துளிகளை கண்ணீராய்
நிலவுகளில் உன் நினைவுகளும்
நிறைவேறா கனவுகளும்
என் நிம்மதியை நித்தமும்
கலைக்கின்றன
கல்மனம் கொண்டவளே
தடம் மாறாத நம் காதலுக்கு
நீ மனம்மாறி வாருவாயா
என் ஜீவனுக்கு உயிர் கொடுப்பாயா
அன்பே......! என் ஆருயிரே......
ஆசையில் ஓர் கடிதம்
கனவிலும் காதலை நினைத்ததில்லை
உன்னைக் காணும் வரை
இனிமேலும் நான் நேசிக்கப்போவதில்லை
உன்னை விட வேறு ஒருவரையும்
கற்பனையிலும் என் கைகள்
கிறுக்குகின்றது உன் பெயரை
நிஜத்திலும் என் கால்கள்
பின் தொடர்கின்றன உன் கால் தடத்தை
உன்னோடு பேசுகின்ற தருணத்தில்
என்னையே தொலைத்து விடுகின்றேன் உன்னிடத்தில்
உன்னை பார்க்கின்ற பொழுதுகளில்
உலகையே மறந்துவிடுகிறேன்
உன் விருப்பு வெறுப்புக்களை
நீ சொல்லாமல் புரிந்து கொண்டேன்
அதை என்னுமா உன் மனம் அறியவில்லை கண்னே
வாழ்க்கையின் சந்தோசமும்
நம் காதலின் வெற்றியும்
உன் வருகையில் தானடி
என் மனதில் பல ஏக்கங்களுடன்
உனக்காக காத்திருக்கும்
உன் அன்பின் காதலன் (என் ஜீவன்)
பனித்துளி விழுந்து பாறை நடுங்குமா
மழைத்துளி விழுந்து பாலைவனம் பசுமையாகுமா
மின்னல் விழுந்து விண்மீன் சேதமாகுமா
தென்றல் வீசி மலைகள் நகருமா
ஆனால் அன்பே
உன் பார்வையில் நான் விழுந்தேன்
உன் சிரிப்பில் நான் மிதந்தேன்
உன் அழகில் நான் மயங்கினேன்
உன் அன்பில் நான் அடிபணிந்தேன்
உன் பாசத்தில் என் இதயத்தை இழந்தேன்
இது என் காதலின் ஆரம்பமா
அன்பின் இறுதியா
உன்னைக் கண்ட வேளை
என் இதயம் துடிப்பதை
நான் உணர்ந்து கொண்டேன்
நீ பேசிய வார்த்தையில்
முழுதாய் இழந்து விட்டேன்
என் வாழ்க்கையை
உன் அழகை ரசித்து
உனக்காக செதுக்கிய
காதல் மாளிகையை
கண் முன்னே நொருக்கிவிட்டாய்
வலிகள் தெரியாத என் வாழ்வில்
வச்ந்தமாய் வந்து
அழியாத சோகம் கொடுத்தாய்
வார்த்தைகளால் கொள்ளாதே
என் உயிரே !
நிஜமாய் வலிக்கின்றது
நீ விலகி விலகிப் போனாலும்
உன் மனதிலிருக்கும்
உண்மை மறையாதல்லவா
அன்பே முகம் பார்த்து
பழகிய எனக்கு
முடிவு தெரியாமல் காத்திருப்பது
வேதனையல்லவா
இது தானா கடவுளின் சோதனை
உன்னை மட்டுமே உலகம்
என எண்ணிய எனக்கு
இப்போது கல்லறை
மட்டும் தான் தஞ்சம்
நேசித்த இதயத்திற்கு
பாசம் அதிகம் என்றார்கள்
ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன்
காதலித்த இதயத்திற்கு
வலிகளும் அதிகம் என்று
நான் உறவுகள் அற்று
தனிமையில் துடித்த போது
சொல்லாமல் வந்த உறவு நீ
முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு
முழு நிலவாய் வந்தவளே
இன்று நான் காதல் பைத்தியத்தில்
கண்ணீரோடு அலைகின்றேன்
உன்னை நேசித்த பாவத்திற்கு
விடை கூறாமல் சென்றவளே
விடை பெறும் நேரத்திலும்
நினைவுகளை மட்டும் தந்தவளே
இன்று உன் கழுத்தில் தாலி என்னும்
பாசக்கயிரை கட்டி
கணவன் என்னும் நாடகம் போடுபவனை
பார்த்து எரிகின்றது என் இதயம்
உன் வாழ்வின் எல்லை வரை
சந்தோசங்கள் மட்டுமே நடை போட
வாழ்த்துகின்றது என் உள்ளம்
கவிதை எழுத கற்பனை தந்தாய்
சுவாசிப்பதற்கு உன் நினைவு தந்தாய்
சிறகு இல்லாமல் பறப்பதற்கு கனவு தந்தாய்
உணர்வுகளை பரிமாற இதயம் தந்தாய்
காதலிப்தற்கு அன்பு தந்தாய்
காதல் உயிர் வாழ புன்னகை தந்தாய்
நான் கல்லறை செல்ல பிரிவு என்னும் வலி தந்தாய்