Tuesday, March 22, 2011

அன்பே உன் பதில் வேண்டும்


என்னை காக்க வைத்த நீ

தனிமையில் அங்கு

உனக்காக காத்திருந்த நான்

தவிர்ப்புக்களில் இங்கு

உன்னையே எண்ணிய எனக்கு

சுற்றி நிகழும் நிஜங்கள் கூட நிழலாய்

உதடு பிரியாத புன்னகையிலும்

ஆடம்பரமில்லா வெட்கத்திலும்

உன் அன்புக்கு அடிமையாகி

எனது இதய நதியில் ஓடமாய்

ஓடிக் கொண்டே இருக்கும் உன் நினைவுகளை

கவிதைகளாக உனக்கு எழுதினேன்

உன் இதயத்தில் எனக்கோர் இடம் கேட்டு

அன்பே, காதலை நேசிக்கும் உன்னிடம்

பகிர்ந்துள்ளேன் என் உணர்வுகளை

பதிலை தந்திடு . . . . . .

Wednesday, March 16, 2011

என்றும் உன் நினைவில் . . . . . .


அன்பே உனக்காக வாழ நினைத்த போதெல்லாம்
உதாசீனப்படுத்தி பைத்தியம் என்றாய்
இன்று உன்னை பிரிந்து உன் நினைவோடு
வாழும் போது பாவம் என்கிறாய்

உதட்டில் நீ மறைத்தாலும்
உன் மனதில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
நீ என்னை வெறுத்தாலும்
என் இதயம் இயக்கும் வரை
உன்னை காதலித்துக் கொண்டிருப்பேன்

உன்னை நேசித்த இதயத்தை
இலகுவாக பிரித்த உனக்கு
இதயத்தின் வலியை மட்டும் எப்படி உணர்வாய்

உன்னுள் என் நினைவுகளாவது
நிம்மதியாய் உறங்கட்டும் என்று
தூங்காத இரவுகளோடு
துணைக்கு நீ இன்றி
ஏங்கித்தவிக்கிறேன் . . . .

என் நண்பா ......


எங்கிருந்தோ வந்தேன்...
நட்பு என்னும் பாலத்தால்
நண்பன் என்னும் உன் உறவை பெற்றேன்

ஆழமாய் துளிர்விட்டு
அழகாய் பூத்தது நம் நட்பு
அந்த நட்பு என்னும் நந்தவனத்தில்
நெடுங்காலம் இணைத்திருந்தோம்

வாழ்க்கை என்னும் பயணத்தில்
துன்பமாய் உன்னை பிரிந்து
மொழி தெரியாத ஊரில் வாழ்ந்தாலும்
என் இதயம் என்னும் இயந்திரம் இயங்கும் வரை
உன் நட்பு என்னும் காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பேன்



என்றும் உன் தோழனாய் சேது . . . . .

எனக்குள்ளே உயிராய் வாழும் உன் காவியமே . . . . .


என் இதய பூந்தோட்டத்தில் மலர்ந்த ரோஜாவே
கடல் கரையில் உன்னுடன்
கெஞ்சி அழுத இரவுகளும்
பேசிய பழகிய நாட்களும்
இன்று என் மனசுக்குள் கண்ணீர் காவியமாய்

என் மீது அளவற்ற அன்பு காட்டி
வலிகளுக்கு கண் கலங்கினாய்
உனக்கு நிகர் யாரும் இல்லை எனக்கு,
என்று நீ அறிந்து அநாதையாய் விட்டு விலகினாய்

இன்று என் மனசுக்குள் நான் படும் வேதனைக்கு
உன்னை தவிர யாருக்கும் தெரிவதில்லை
என் விரல் பிடித்து நீ துடைத்த மணல்களும்
நீ எழுதிய கவிதைகளும்
என் கண் முன்னால்

நீ கடல் தாண்டி இருந்தாலும்
என் மனதில் தினமும் கலையாத கனவுகளில்
என் அருகில் இருந்த முழுநிலா தொலை தூரத்தில் சென்றாலும்
தனிமையில் உன் நினைவுகளுடன் உன் கால் தடத்தில்
தினமும் உன் வரவை எதிர் பார்த்து காத்திருகிறேன்

Wednesday, September 1, 2010

உன்னை தொலைக்க ஆரம்பித்த தருணங்களிருந்து


அன்று உறவுகள் அற்ற எனக்கு
உன் அன்பால் ஒரு உலகம் அமைத்து
உன்னை உறவாக்கி கொடுத்தாய்,
உன்னை உயிராய் நினைத்த என்னை
உதறிச் சென்றாய் இன்று

உன் விருப்புக்கிணங்க
என் கனவுகளை தொலைத்து, ஆசைகளை புதைத்து,
உன்னுடன் மட்டுமே சென்ற
தொலை தூர பயணங்களும்,
கடற்கரைகளில் உன்னுடன் கைகோர்த்து
நடந்து வந்த பாதைகளையும்
திரும்பி பார்க்க மறுக்கின்றதென் மனம்

மனதால் ஊனம் உற்ற என்னை
உன் பிரிவால் ஊமை ஆக்கினாய்
வாழ்க்கை என்னும் இன்ப கடலில்
வழி காட்டியாய் வந்து
வானவில்லாய் மின்னிச் சென்றாய்

உன் மடி சாய்ந்து உறங்க ஏங்கிய எனக்கு
நிரந்தர தூக்கத்தை கொடுத்து விட்டாய்....
இன்று உன் பிரிவை தாங்க முடியாமல்
என் நினைவுகளில் இருந்து
உன் எல்லையற்ற அன்பை விலக்க
முயச்சிக்கிறேன்.....

Friday, July 16, 2010

மனம் வெறுக்கவில்லை. . . .


நான் இது வரை உணரவில்லை
உன் உண்மை காதல் எதுவென்று
உன்னோடு பழகிய ஒவ்வொரு நொடியிலும்
உணர்த்தினாய் உன் உயிர் மேலான
என் காதலை!!!

என் நினைவுகளை குறைத்து
உன்னை, உன் நினைவுகளையே ரசித்தேன்
நீ தொலைபேசியில் பேசிய வேளையில்
தொலைந்து போனது எனது ஜீவன்.....
உன் மௌனத்தால்
என் உள்ளத்தையே ஊமையாக்கினாய்

என் மனதை புரிந்து கொண்ட உனக்கு
என் இதயம் எப்பொழுதும் துடித்துக்கொண்டிருப்பது உனக்காக தான்
இதை மட்டும் நீ ஏன் இப்போழுது புரிந்து கொள்ள மறுக்கிறாய்
உன்னால் நான் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல
என்றாலும் மனம் வெறுக்கவில்லை

உன்னால், நான் உயிர் இருந்தும்
உணர்வற்று அலைகிறேன்
என் அன்பே, உயிர் கொடுப்பாயா
இல்லை உயிரை பிரிப்பாயா ? ? ? ?

என் உயிர் நண்பனே காதலித்து விடாதே . . . . . .


நண்பா நீ காதலில் கால் பதித்து
கண்ணீரை சொந்தமாக்கிவிடாதே
உன் பசுமைகளை தீக்கிரையாக்கி
இன்பங்களை தொலைத்துவிடாதே

மாயங்களில் மயங்கி
இரவுகளில் தூக்கமின்றி
தனிமையில் கண்ணீர் சிந்தி
கணப் பொழுதில் உன்னை கலங்கப்படுத்தி
உன் எதிர்காலத்தை வீணடித்துவிடாதே

உன்னை அரவணைத்த பெற்றோருடன்
எல்லை கடந்து முரண்பட்டு
அன்பு காட்டிய சகோதரைத்தை
பிரிந்து சென்று
பல துன்பங்களை அனுபவித்துவிடாதே

காதலியை கனவு கண்டு
உன் அழகிய வாழ்க்கையை தொலைக்காதே
பிரிவின் வேதனை தாங்க முடியாமல்
மதுவுக்கு அடிமை ஆகிவிடாதே

உன் இனிய உறவுகளால் வெறுக்கப்பட்டு
சமூகத்தால் விரட்டப்பட்டு
நினைவுகளில் இருந்து விடுபடாமல்
உன் உயிரை இழந்துவிடாதே. . . . . .