Saturday, April 30, 2011

மறந்து விடாதே . . . . . . !!


பாசம் என்னும் போதைக்கு
பலியாகிய நம் இதயங்களை
சிதறடித்தாய் இன்று,
சிந்துகின்ற கண்ணீரில் கழுவிப்பாக்கின்றேன்
காதலித்த தருணங்களை

அர்த்தம் இல்லாத என் வாழ்க்கையில்
வழி தவறிய வேளை
வழி காட்டியாய் வந்தவளே
உன் திரு முகத்தை பார்த்த வேளை
முழுதாய் சரண் அடைந்த்தேன் உன்னிடத்தில்

தூங்காத இரவுகளில் இணைந்த இதயங்களை
நினைத்து நித்தம் நித்தம் பல கனவுகள்
உன்னை காதலித்த போது
கரை ஒதுக்கிய நண்பனையும்
காயப்படுத்திய பெற்றோரையும்
இன்றுவரை நினைத்ததில்லை

உன்னை தேடும்வரை
உடல் வாடுவதில்லை
உன்னோடு பேசும் வரை
என் உள்ளம் சோர்வதில்லை
என்னை கண்டவுடன்
உன் புன்னகைக்கு நிகர்
ஏதும் இல்லை எனக்கு

என் இதயத் தோட்டத்தில் மலர்ந்த
காதல் ரோஜாவே
இதமான பொழுதுகளில்
உன்னோடு இன்பமான பயணங்களும்
எல்லையில்லா சந்தோசங்களும்

கல் முள் நிறைந்த பாதைகளில்
கண்ணீர் சிந்தாத நம் இதயங்கள்
கொட்டும் மழையினிலும் இணை பிரியா ஜீவன்கள்
இன்று துணைக்கு யாரும் இன்றி
தனிமையில் துடிக்கின்றது

என் உயிரே
நம் அழியாத காதலுக்கு
முடியாத சோகம்தனை
கல்லறை வரை சுமக்கின்ற
இந்த உயிருள்ள காதலனை மறந்து விடாதே. . . .

உயிர் கொடுப்பாயா. . . . . . ?


எங்கிருந்தோ வந்தாய்
எனக்கு சில நாள் சந்தோசம் தந்து
வாழ் நாள் முழுக்க சோகம் தந்தாய்
பல அதிர்வுகளை தாங்கியும்
புண் படாத இதயத்தை
சில நொடிகளில் சிதறடித்தாய்

என்மீது பாசத்தைக் காட்டி
என் மனதை திருடியவளே
குளிர் இரவிலும்
அணு அணுவாய் சுடுகின்றது
நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்
என் இதயம் சிந்துகின்றது
உதிரத் துளிகளை கண்ணீராய்

நிலவுகளில் உன் நினைவுகளும்
நிறைவேறா கனவுகளும்
என் நிம்மதியை நித்தமும்
கலைக்கின்றன

கல்மனம் கொண்டவளே
தடம் மாறாத நம் காதலுக்கு
நீ மனம்மாறி வாருவாயா
என் ஜீவனுக்கு உயிர் கொடுப்பாயா

காதல் கடிதம்


அன்பே......! என் ஆருயிரே......
ஆசையில் ஓர் கடிதம்
கனவிலும் காதலை நினைத்ததில்லை
உன்னைக் காணும் வரை
இனிமேலும் நான் நேசிக்கப்போவதில்லை
உன்னை விட வேறு ஒருவரையும்
கற்பனையிலும் என் கைகள்
கிறுக்குகின்றது உன் பெயரை
நிஜத்திலும் என் கால்கள்
பின் தொடர்கின்றன உன் கால் தடத்தை
உன்னோடு பேசுகின்ற தருணத்தில்
என்னையே தொலைத்து விடுகின்றேன் உன்னிடத்தில்
உன்னை பார்க்கின்ற பொழுதுகளில்
உலகையே மறந்துவிடுகிறேன்
உன் விருப்பு வெறுப்புக்களை
நீ சொல்லாமல் புரிந்து கொண்டேன்
அதை என்னுமா உன் மனம் அறியவில்லை கண்னே
வாழ்க்கையின் சந்தோசமும்
நம் காதலின் வெற்றியும்
உன் வருகையில் தானடி
என் மனதில் பல ஏக்கங்களுடன்
உனக்காக காத்திருக்கும்
உன் அன்பின் காதலன் (என் ஜீவன்)

காதலின் ஆரம்பமா...... அன்பின் இறுதியா......


பனித்துளி விழுந்து பாறை நடுங்குமா
மழைத்துளி விழுந்து பாலைவனம் பசுமையாகுமா
மின்னல் விழுந்து விண்மீன் சேதமாகுமா
தென்றல் வீசி மலைகள் நகருமா
ஆனால் அன்பே
உன் பார்வையில் நான் விழுந்தேன்
உன் சிரிப்பில் நான் மிதந்தேன்
உன் அழகில் நான் மயங்கினேன்
உன் அன்பில் நான் அடிபணிந்தேன்
உன் பாசத்தில் என் இதயத்தை இழந்தேன்
இது என் காதலின் ஆரம்பமா
அன்பின் இறுதியா

Thursday, April 21, 2011

என் காதல் . . . . .


உன்னைக் கண்ட வேளை
என் இதயம் துடிப்பதை
நான் உணர்ந்து கொண்டேன்
நீ பேசிய வார்த்தையில்
முழுதாய் இழந்து விட்டேன்
என் வாழ்க்கையை

உன் அழகை ரசித்து
உனக்காக செதுக்கிய
காதல் மாளிகையை
கண் முன்னே நொருக்கிவிட்டாய்

வலிகள் தெரியாத என் வாழ்வில்
வச்ந்தமாய் வந்து
அழியாத சோகம் கொடுத்தாய்

வார்த்தைகளால் கொள்ளாதே
என் உயிரே !
நிஜமாய் வலிக்கின்றது
நீ விலகி விலகிப் போனாலும்
உன் மனதிலிருக்கும்
உண்மை மறையாதல்லவா

அன்பே முகம் பார்த்து
பழகிய எனக்கு
முடிவு தெரியாமல் காத்திருப்பது
வேதனையல்லவா
இது தானா கடவுளின் சோதனை

உன்னை மட்டுமே உலகம்
என எண்ணிய எனக்கு
இப்போது கல்லறை
மட்டும் தான் தஞ்சம்

என்னவளே


நேசித்த இதயத்திற்கு
பாசம் அதிகம் என்றார்கள்
ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன்
காதலித்த இதயத்திற்கு
வலிகளும் அதிகம் என்று

நான் உறவுகள் அற்று
தனிமையில் துடித்த போது
சொல்லாமல் வந்த உறவு நீ
முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு
முழு நிலவாய் வந்தவளே
இன்று நான் காதல் பைத்தியத்தில்
கண்ணீரோடு அலைகின்றேன்

உன்னை நேசித்த பாவத்திற்கு
விடை கூறாமல் சென்றவளே
விடை பெறும் நேரத்திலும்
நினைவுகளை மட்டும் தந்தவளே

இன்று உன் கழுத்தில் தாலி என்னும்
பாசக்கயிரை கட்டி
கணவன் என்னும் நாடகம் போடுபவனை
பார்த்து எரிகின்றது என் இதயம்

உன் வாழ்வின் எல்லை வரை
சந்தோசங்கள் மட்டுமே நடை போட
வாழ்த்துகின்றது என் உள்ளம்

இதயமானவளே


கவிதை எழுத கற்பனை தந்தாய்
சுவாசிப்பதற்கு உன் நினைவு தந்தாய்
சிறகு இல்லாமல் பறப்பதற்கு கனவு தந்தாய்
உணர்வுகளை பரிமாற இதயம் தந்தாய்
காதலிப்தற்கு அன்பு தந்தாய்
காதல் உயிர் வாழ புன்னகை தந்தாய்
நான் கல்லறை செல்ல பிரிவு என்னும் வலி தந்தாய்

Tuesday, April 19, 2011

அன்பே காதலிப்பது பாவமா


அன்பே காதலிப்பது பாவமா
உன்னை கனவு கண்டு
வாழ்க்கையை தொலைத்தேன்
என் வாலிப வயதினிலே

என் மனச் சாலையில்
நித்தம் நித்தம் பல கேள்விகள்
அத்தனையும் உன் மெளனத்திற்க்கு முன்னால்
ஊமை யாகின்றன
என் நினைவுப் பறவை
உன் சுவாசக் காற்றில் பறக்கின்றது தினமும்

இன்று கவனிப்பாரற்ற மனம்
சிந்துகின்றது கண்ணீரை
ஆரும் அறியாத் தனிமையில்
துடிக்கின்றது என் இதயம்

உறங்காத என் ஏக்கங்களும்
புரிந்து கொள்ள முடியாத வலிகளோடு
நாளைய விடியலில் உன் வருகையை
எதிர்பாத்து காத்திருகிறேன்

நீயே


கண்முன் தோன்றியவள் நீயே

கனவுகளை தந்தவளும் நீயே

காதலை சொன்னது காதலியாய் வந்தவள் நீயே

என் இதயத்தை திருடியவள் நீயே

உணர்வுகளை தந்தவளும் நீயே

அழகான நாட்களை தந்தவள் நீயே

அவஸ்தையை தந்தவளும் நீயே

என்மீது இரக்கப்பட்டவள் நீயே

என்னை பிரிந்து சென்றவளும் நீயே

எனக்கு முகவரியாய் வந்தவள் நீயே

என் இதயத்தில் முள்ளாய் குத்தியவளும் நீயே

முழு நிலவாய் வந்தவள் நீயே

என் தூக்கத்தை கெடுத்தவளும் நீயே

நினைவுகளை தந்தவள் நீயே

நீங்காத வலிகளை தந்தவளும் நீயே

உண்மை காதல் புரியும்


சுவாசிக்கும் போது தான் தென்றல் தெரியும்
இரவு வரும் போது தான் நிலா தெரியும்
பூ வாடும் போது தான் மணத்தின் அருமை தெரியும்
வேலை தேடும் போது தான் படிப்பின் திறமை தெரியும்
கடின உழைப்பின் போது தான் வாழ்வின் சுகம் தெரியும்
ஆபத்து வரும் போது தான் நட்பின் ஆழம் தெரியும்
உனக்காக உயிர் பிரியும் போது தான்
என் உண்மை காதல் புரியும்

Monday, April 11, 2011

உனக்காக காத்திருகின்றேன் . . . . . .


இயற்கையை இனிதே ரசித்து
பசுமையான பாதையில்
இன்பமான வாழ்கையை
பயணித்த வேளை
காதல் என்னும் விபத்தில்
சிக்கினேன் உன்னிடத்தில்

உன்னருகே இருத்த வேளை
வாழ்க்கையை நினைத்ததில்லை
வலிகள் உணர்ந்ததில்லை
கடவுளை கூட வணங்கியதில்லை

விதியின் விளையாட்டால்
வலிகளுடன் காதலை
என்னிடத்தில் விட்டு
விடைபெற்றுச் சென்றாய்

இன்று சோகத்துடன் மீட்கின்றேன்
அன்றைய நாட்களை
கண்ணீரோடு அலைகின்றேன்
இருவரும் சேர்ந்து இருந்த இடங்களில்

அன்பே ஜீவன் பிரியும் வரை
நம் பிரிவுகள் நிரந்தரமில்லை
உன் நினைவுகளை மறக்கும் வரை
நம் காதல் அழிவதில்லை
காலங்கள் பல ஆனாலும்
என் இதய தேசத்தில்
என்றும் உன்க்காக இடமிருக்கும்
அங்கு உன் வரவை எதிர் பாத்து காத்திருபேன்

மெளனம் வேண்டாம். . .


உன்னை நேசித்து
உனக்காக காத்திருக்கும்
என் இதயத்தை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னை நினைத்து
என்னுள்ளத்தில் கனவு காணும்
என் மனதை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன் பெயரை உச்சரித்து
உனக்கு பல கவிதை எழுதி
உணர்வற்ற என் கைகளை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னோடு வாழ்ந்து
உனக்காக சாக துணியும்
என் உயிரை நினைத்தாவது
என்னோடு ஒரு வார்த்தை பேசு

பெண்ணே , மரணம் கூட ஒரு தடவை தான்
ஆனால் உன் மெளனம் நித்தம் நித்தம்
என்னை கொல்லாமல் கொல்கின்றதே
இனியும் மெளனம் வேண்டாம். . . .
அன்பே உன் திருவாய் மலர்ந்து
என்னோடு ஒரு வார்த்தை பேசு

உன்னை நினைத்தேன்


உன்னை துணையாக நினைத்தேன்

என்னை தனிமையில் விட்டாய்

உன்னை என் உயிராக நினைத்தேன்

என் கண்கள் கண்ணீரில் வசீகரிக்கிறது

உன் நினைவுகளை நினைத்தேன்

என் இதயம் வலிக்கின்றது

உன்னை மறக்க நினைத்தேன்

உன் நினைவுகள் தடுக்கின்றன

உன்னை வெறுக்க நினைத்தேன்

என் இதயம் மறுக்கிறது

உனக்காக சாக நினைத்தேன்

நம் காதல் காப்பாற்றுகின்றது

புரிகின்றதா உனக்கு

என் உயிரே நீ தான் செல்லமே

Wednesday, April 6, 2011

செய்த குற்றங்கள்


என் விழிகள் செய்த குற்றத்தால்

உன்னை ஆயுள் கைதியாய்

மனச் சிறையில் அடைத்தேன்

என் இதயம் செய்த குற்றத்தால்

நீ என்னிடம் மௌன மொழி பேசியது

நம் இரு உயிர் செய்த குற்றத்தால்

வசந்தங்கள் நிறைந்த வாழ்வை

கனவுகளில் தொலைத்தது

நம் காதல் செய்த குற்றத்தால்

இருவரும் தனிமையில் தவிர்ப்பது

உன் நினைவு செய்த குற்றத்தால்

பிரிந்து சென்ற உனக்கு

இன்றுவரை கவிதை எழுதிக் கொண்டிருப்பது

கனவிலும் உன்னோடு தான். . . . . .


கனவுகளை மனதில் நிறைத்து
காதல் உணர்வை வளர்த்தவளே
அத்தனையும் நிஜமாவதிற்குள்
நினைவுகளை மட்டும்
உன் நிழல்களுடன் விட்டு
நீ எங்கு சென்றாய்

உன் நிழலில் குளிர் காயும் எனக்கு
இவ் உலகில் நிம்மதி இல்லை
உனக்காக விடைபெற்ற சொந்தங்களிடம்
சொல்லி அழ மனசில்லை
உன்னையே நேசித்துக் கொண்டிருக்கும்
என் இதயத்தில்
உன்னை தவிர யாருக்கும்
இவ் உலகில் இடமில்லை
உன்னை பார்க்க துடிக்கும்
கண்களுக்கு கண்ணீரைத் தவிர
யாரும் இல்லை ஆறுதலுக்கு
தூங்க தயங்கும் விழிகளுக்கு
துணை கூட உன் நினைவுகள் தான்

Monday, April 4, 2011

நீ விட்டு சென்ற காதல்


என் இனிய தென்றலே
நான் அடிமை ஆகியது
உன் அன்புக்காக தானே
அதனால் தான்
என் இதயம் இன்று வரை
உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது

விழிகளில் கண்ணீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
இன்னும் பத்திரமாய்
உன்னுள்ளே இருக்கிறது
நீ என்னுடன் பேசிய
சில நிமிடங்களும்
பழகிய காலங்களும்
என் வாழ்வின் பொக்கிஷமாய்

அன்பே உன் புண்ணகை பூத்த முகமும்
நீ என்னோடு போட்ட செல்லச் சண்டைகளும்
இன்று என் மனதுக்குள்
அலை மோதுகிறது
நான் திரும்பும் இடமெங்கும்
உன் காலடித் தடங்களும்
நான் சுவாசிக்கும் காற்று முழுக்க
உன் நினைவுகளும்
தினம் தினம் என்னை வருடிச் செல்கின்றன

உன்னால் வாழ்க்கையின் அர்த்தத்தையும்
பாசத்தின் ஆழத்தையும்
புரிந்து கொண்ட எனக்கு
பிரிவின் வலியை மட்டும்
தாங்க முடியவில்லையே
இவற்றை மறக்கும் சக்தி
என் மனதுக்கு இல்லையே

இப்படி எல்லாம் நடப்பது
என் விதியா
இது அப்போதே தெரிந்திருந்தால்
உன்னை பிரிந்து மகிழிச்சியுடன் சென்றிருப்பேன்
உவ்வுலகை விட்டு. . . . . .