Monday, April 4, 2011

நீ விட்டு சென்ற காதல்


என் இனிய தென்றலே
நான் அடிமை ஆகியது
உன் அன்புக்காக தானே
அதனால் தான்
என் இதயம் இன்று வரை
உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது

விழிகளில் கண்ணீர் வடிந்தாலும்
உன் நினைவுகள்
இன்னும் பத்திரமாய்
உன்னுள்ளே இருக்கிறது
நீ என்னுடன் பேசிய
சில நிமிடங்களும்
பழகிய காலங்களும்
என் வாழ்வின் பொக்கிஷமாய்

அன்பே உன் புண்ணகை பூத்த முகமும்
நீ என்னோடு போட்ட செல்லச் சண்டைகளும்
இன்று என் மனதுக்குள்
அலை மோதுகிறது
நான் திரும்பும் இடமெங்கும்
உன் காலடித் தடங்களும்
நான் சுவாசிக்கும் காற்று முழுக்க
உன் நினைவுகளும்
தினம் தினம் என்னை வருடிச் செல்கின்றன

உன்னால் வாழ்க்கையின் அர்த்தத்தையும்
பாசத்தின் ஆழத்தையும்
புரிந்து கொண்ட எனக்கு
பிரிவின் வலியை மட்டும்
தாங்க முடியவில்லையே
இவற்றை மறக்கும் சக்தி
என் மனதுக்கு இல்லையே

இப்படி எல்லாம் நடப்பது
என் விதியா
இது அப்போதே தெரிந்திருந்தால்
உன்னை பிரிந்து மகிழிச்சியுடன் சென்றிருப்பேன்
உவ்வுலகை விட்டு. . . . . .

No comments:

Post a Comment