Saturday, April 30, 2011

மறந்து விடாதே . . . . . . !!


பாசம் என்னும் போதைக்கு
பலியாகிய நம் இதயங்களை
சிதறடித்தாய் இன்று,
சிந்துகின்ற கண்ணீரில் கழுவிப்பாக்கின்றேன்
காதலித்த தருணங்களை

அர்த்தம் இல்லாத என் வாழ்க்கையில்
வழி தவறிய வேளை
வழி காட்டியாய் வந்தவளே
உன் திரு முகத்தை பார்த்த வேளை
முழுதாய் சரண் அடைந்த்தேன் உன்னிடத்தில்

தூங்காத இரவுகளில் இணைந்த இதயங்களை
நினைத்து நித்தம் நித்தம் பல கனவுகள்
உன்னை காதலித்த போது
கரை ஒதுக்கிய நண்பனையும்
காயப்படுத்திய பெற்றோரையும்
இன்றுவரை நினைத்ததில்லை

உன்னை தேடும்வரை
உடல் வாடுவதில்லை
உன்னோடு பேசும் வரை
என் உள்ளம் சோர்வதில்லை
என்னை கண்டவுடன்
உன் புன்னகைக்கு நிகர்
ஏதும் இல்லை எனக்கு

என் இதயத் தோட்டத்தில் மலர்ந்த
காதல் ரோஜாவே
இதமான பொழுதுகளில்
உன்னோடு இன்பமான பயணங்களும்
எல்லையில்லா சந்தோசங்களும்

கல் முள் நிறைந்த பாதைகளில்
கண்ணீர் சிந்தாத நம் இதயங்கள்
கொட்டும் மழையினிலும் இணை பிரியா ஜீவன்கள்
இன்று துணைக்கு யாரும் இன்றி
தனிமையில் துடிக்கின்றது

என் உயிரே
நம் அழியாத காதலுக்கு
முடியாத சோகம்தனை
கல்லறை வரை சுமக்கின்ற
இந்த உயிருள்ள காதலனை மறந்து விடாதே. . . .

1 comment:

  1. உயிருள்ள கவிதைகள... தொடரட்டும் கலைப்பயணம். வாழ்த்துக்கள்,

    ReplyDelete